வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 6 நவம்பர் 2015 (17:53 IST)

ராணுவ வீரர்களும் விருதுகளை திருப்பி தர முடிவு : மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடி

தங்களின் கோரிக்கை நிறைவேற்றப் படவில்லையெனில்  தங்களின் விருதுகளை திருப்பி தரப்போவதாக முன்னாள் ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ள சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ஒரே பதவி, ஒரே பென்சன் கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கனவே முன்னாள் ராணுவ வீரர்கள் மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில் தங்கள் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றா விட்டால் தாங்கள் பெற்றுள்ள பதக்கங்களை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் திருப்பி அளிப்போம் என்றும், இந்த தீபாவளி பண்டிகையை நாங்கள் கறுப்பு தீபாவளியாக அனுசரிக்க போகிறோம் என்றும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சத்பீர் சிங் கூறியுள்ளார்.
 
நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதை சுட்டிக் காட்டி ஏற்கனவே பல எழுத்தாளர்கள் மற்றும் திரைப்பட கலைஞர்கள் தங்கள் விருதுகளை திருப்பி அளித்து வருகின்றனர். சமீபத்தில் கூட எழுத்தாளர் அருந்ததி ராய், இயக்குனர்கள் குந்தன் ஷா, சயீது மிர்சா உட்பட 24 சினிமா பிரபலங்கள் நேற்று தங்களுடைய விருதுகளை திருப்பி கொடுத்துள்ளனர்.
 
இந்நிலையில் முன்னாள் ராணுவ வீரர்களும் தங்கள் விருதுகளை திருப்பி தருவதாக கூறியிருப்பது மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.