டெல்லியல் தினமும் 6 பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் கொடுமை


லெனின் அகத்தியநாடன்| Last Modified திங்கள், 19 அக்டோபர் 2015 (19:47 IST)
நடப்பாண்டில், டெல்லியில் தினமும் 6 பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாகவும், 14 பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாகவும் காவல்துறையின் தரவில் கூறப்பட்டுள்ளது.
 
 
நடப்பாண்டில் கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வரையிலான, 9 மாதங்களில் தில்லியின் பல்வேறு காவல் நிலையங்களில் 1557 பாலியல் வன்கொடுமை வழக்குகளும், 3876 பாலியல் துன்புறுத்தல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கிடையில் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ள தரவில், கடந்த 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில், 10 வயதிற்குட்பட்ட 364 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த வருடத்தில் 1551 பாலியல் வன்கொடுமை வழக்குகளும், 3706 பாலியல் துன்புறுத்தல் வழக்குகளும் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :