வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 9 டிசம்பர் 2019 (19:14 IST)

மன்மோகன் சிங் எப்படி இந்தியாவுக்குள் வந்தார்... அமித்ஷா பேச்சு!!

அத்வானி, மன்மோகன் சின் ஆகியோர் கூட புலம்பெயர்ந்தவர்கள் தான் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
 
பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3 நாடுகளிலிருந்து இந்தியாவில் குடிபெயர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை தரும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். 
 
அதன் படி 3 நாடுகளிலிருந்து இந்தியாவில் அகதிகளாக குடிபெற்ற இந்துக்கள், கிறுஸ்துவர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்ஸி, சீக்கியர்கள் ஆகிய 6 மதத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த சட்டம் குடியுரிமை அளிக்க அனுமதிக்கும். 
 
இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தில் இடமில்லாததால் இது சிறுபான்மையினருக்கு எதிரானது எனவும் அரசியலமைப்பு சட்டத்தின் அனைவரும் சமம் என்ற சட்டவிதிகளுக்கும் எதிரானது எனவும் எதிர்கட்சிகளும் பல அமைப்புகளும் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். 
 
இந்நிலையில் மக்களைவியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா பின்னணியில் எந்த அரசியல் பின்புலமும் இல்லை எனவும், இதில் அநீதி என்ற கேள்விக்கே இடமில்லை. 
 
மேலும், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவால் அநீதி ஏற்படும் என கேள்வி எழுப்புவதே தவறு. 1947 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு புலம்ப்ந்யர்ந்தவர்களை எல்லாம் இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் இருப்பார்கள். அத்வானி, மன்மோகன் சின் ஆகியோர் கூட புலம்பெயர்ந்தவர்கள் தான் என தெரிவித்துள்ளார்.