செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (12:48 IST)

லட்சங்களை உதறிவிட்டு தெருவோர குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் இன்ஜினியர்

மாதம் ரூ.3.5 லட்சம் சம்பளத்தை விட்டுவிட்டு இன்ஜினியர் ஒருவர் தெருவோர குழந்தைகளுக்கு பாடம் நடத்தி வருகிறார்.


 

 
 
குஜராத் மாநிலத்தில் விராட்ஷா என்ற இளைஞர் சிறு வயது முதல் கஷ்டப்பட்டு படித்தவர். கல்விக்கட்டணங்கள் கட்டுவதற்கு கூட கஷ்டப்பட்டுள்ளார். இவருக்கு படித்து முடித்தவுடன் துபாயில் மாதம் ரூ.3.5 லட்சம் சம்பளத்துடன் வேலையும் கிடைத்தது.
 
துபாயில் இருக்கும் போது அவருக்கு கெமிக்கல் இன்ஜினியருடன் திருமணம் நடந்தது. சிறுவயது முதல் இவருக்கு படிப்பை தொடர முடியாமல் கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது.
 
சிறிது காலம் துபாயில் பணியாற்றி கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு வந்த விராத் ஷா அலகாபாத்தில் தெருவோர குழந்தைகளுக்கு கல்வி வழங்க தொடங்கினார்.
 
45 வயதான ஷாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர் பள்ளி செல்லாமல் இருக்கும் குழந்தைகளை படிக்க வைப்பதற்காக தனது முழு நாளையும் எடுத்துக்கொள்கிறார். தெருவோரங்களில் வீடுகள் இல்லாமல் இருக்கும் குழந்தைகளை தனது பொறுப்பில் எடுத்து வளர்த்து வருகிறார்.
 
தற்போது 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்வி வழங்கி வருகிறார்.