லவ் ஜிகாத்துக்கு எதிராக அவசர சட்டம்...மீறினால் 10 ஆண்டுகள் சிறை...ஆளுநர் ஒப்புதல்

utterpradesh
Sinoj| Last Updated: சனி, 28 நவம்பர் 2020 (16:20 IST)

உத்தரபிரதேசத்தில் லவ் ஜிகாத்திற்கு எதிரான புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு உ.பி ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த சில மாதங்களில் வட மாநிலங்களில் லவ் ஜிகாத்திற்கு எதிராக கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில் லவ் ஜிகாத்தை கட்டுப்படுத்த சட்டங்கள் உருவாக்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்திருந்தார். இதுகுறித்து சமீபத்தில் பேசியுள்ள ம.பி அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, அடுத்த சட்டமன்ற கூட்டத்தில் லவ் ஜிகாத்திற்கு எதிராக சட்டம் நிறைவேற்றப்படும் என்றும், அதில் 5 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியிருந்தார்.

அதேபோல் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச மாநிலத்திலும் லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டம் இயற்றப்படுவதாகவும் , லவ் ஜிகாத்தினால் மதம் மாறி திருமணம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இதற்கு எதிரான விரையில் சட்டம் இயற்றப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், காதலித்து கட்டாய மதம் மாற்றம் செய்து திருமணம் செய்வோருக்கு 10
ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் அவசர சட்ட மசோதாவுக்கு உ.பி, ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.


உத்தர பிரதேசம்
மட்டுமல்லாமல் ஹரியானா, கர்நாடகா, அசாம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் லவ் ஜிகாத்திற்கு எதிராக சட்டம் இயற்ற நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.



இதில் மேலும் படிக்கவும் :