காளான் பறிக்க காட்டிற்குள் சென்ற பெண்களை யானை தாக்கியது : இரண்டு பேர் பலி


Murugan| Last Modified வியாழன், 8 அக்டோபர் 2015 (21:19 IST)
மேற்கு வங்காளத்தில் காளான் சேகரிக்க காட்டிற்குள் சென்ற இரண்டு பெண்கள் யானை தாக்கியதால் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

 
 
மேற்கு வங்காள மாநிலத்தின் பன்குரா மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இடம் மட்லா கிராமம் . இந்த கிராமத்திலிருந்து, அஷோகா(45), ரபிபல தாஸ்(55) மற்றும் மீரா (55) ஆகிய மூன்று பெண்கள் காளான் சேகரிப்பதற்காக காட்டிற்குள் சென்றுள்ளனர்.
 
அப்போது அங்கு வந்த காட்டு யானைகளிடம் அவர்கள் சிக்கினர். அதில், காட்டுயானை தாக்கியதில் அஷோகாவும், ரபிபல தாஸும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட மீரா, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.


இதில் மேலும் படிக்கவும் :