வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 3 நவம்பர் 2015 (07:31 IST)

இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக சந்தீப் சக்சேனா நியமனம்: அரசாணை வெளியீடு

இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக சந்தீப் சக்சேனா நியமனம் குறித்த தகவல், மத்திய அரசின் பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறையின் இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது.


 

 
அந்த அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
 
மத்திய இணைச் செயலாளர்களின் நியமனத்தை மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு அங்கீகரித்துள்ளது.
 
அதன்படி, மத்திய அரசின் இணைச் செயலாளர் அந்தஸ்தில், இருந்த சந்தீப் சக்சேனா இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக நியமிக்கப்படுகிறார்.
 
அவர் பதவி ஏற்ற நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்கோ அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையிலோ, இதில் எது முதலாவதாக நிகழ்கிறதோ அதுவரை இந்தப் பதவியில் சந்தீப் சக்சேனா நீடிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
சந்தீப் சக்சேனா தமிழகத்தின் தலைமைத்தேர்தல் அதிகாரியாக 27-10-14 அன்று பதவி ஏற்றார்.

இந்நிலையில் அவருக்கு பதவி உயர்வு அளிக்கும் வகையில் அவரை இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக நியமித்து அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.