நாட்டின் பிரதமராக மே 21 ஆம் தேதி நரேந்திர மோடி பதவியேற்பார் என தகவல்

Narendra Modi set to sworn-in as India’s Prime Minister on May 21
Geetha priya| Last Updated: வெள்ளி, 16 மே 2014 (13:48 IST)
 
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றதால் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகிறார். வரும் 21 ஆம்  தேதி முதன் முறையாக நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
நாடெங்கும் ஒன்பது கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. வாக்கு எண்ணிக்கையில் நாடு முழுவதும் பாஜக அதன் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 332 இடங்களை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
நரேந்திர மோடி போட்டியிட்ட வதோதரா தொகுதியில் அவர் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவர் ஆம் ஆத்மி கட்சி தலைவரான் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் போட்டியிட்ட வாரணாசி தொகுதியிலும் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தெரிகிறது.
 
இந்நிலையில் வெற்றி பெற்றது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த மோடி, இந்தியா வென்றுவிட்டது. நல்ல நாட்கள் வந்துக்கொண்டிருக்கின்றன' என பதிவு செய்துள்ளார்.
 
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்று வெற்றி பெறுவது உறுதியான நிலையில், வரும் 21 ஆம்  தேதி முதன் முறையாக நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
மோடியின் இந்த வெற்றிக்கு அக்கட்சியை சேர்ந்த சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்நாத் சிங் ஆகியோர் அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.  


இதில் மேலும் படிக்கவும் :