வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 30 ஜூன் 2016 (11:55 IST)

ஜெகன் மோகன் ரெட்டியின் ரூ. 749 கோடி மதிப்பிலான சொத்துக்கள் ஜப்தி

ஜெகன் மோகன் ரெட்டிக்கு சொந்தமான ரூ. 749 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
 

 
ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் சந்திர பாபு நாயுடு அரசு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீது வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் வாங்கி குவித்ததாக வழக்குத் தொடர்ந்தது.
 
ஜெகன் மோகன் ரெட்டி மறைந்த முன்னாள் காங்கிரஸ் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனாவார். ராஜசேகர ரெட்டி ஆட்சியின் போது பல்வேறு நிறுவனங்களிடமிருந்து லஞ்சமாக பணம் பெற்றதாக ஜெகன் மோகன் ரெட்டி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
 
இந்த வழக்கில் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததற்கான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. ரூ. 404 கோடி ரூபாய் அசையும் சொத்துக்களும், ரூ. 344 கோடி அசையா சொத்துக்களும் வாங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இந்த வழக்கு தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டிக்கு சொந்தமான பெங்களூரூ, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள ரூ. 749 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.