வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : ஞாயிறு, 26 ஏப்ரல் 2015 (12:46 IST)

வட மாநிலங்களில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்வு

பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய வடமாநிலங்களில்  நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 240 காயம் அடைந்தனர்.


 

 
பீகார் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆகப் பதிவாகியிருந்தது. தலைநகர் பாட்னா மற்றும் நேபாள எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் மேற்கூரை சரிந்து விழுந்தும், சுவர் இடிந்து விழுந்தும் பெண்கள், குழந்தைகள் உள்பட 38 பேர் பலியாயினர்.
 
நேற்று காலை 11.42 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்ந்து 3 நிமிடம் நீடித்தது. அதனைத்தொடர்ந்து இரண்டாவதாக பகல் 12.16 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பாட்னாவில் இடி–மின்னலுடன் பலத்த மழை பெய்தது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதற்காக தேசிய பேரிடர் மீட்புப்படையைச் சேர்ந்த 5 குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
 
இந்த நிலநடுக்கத்திற்கு உத்தரபிர தேச மாநிலத்தில் 11 பேர் பலி ஆனார்கள். 69 பேர் காயம் அடைந்தனர். மேற்குவங்கத்தில், நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆகப் பதிவாகியிருந்தது. இதனால், மேற்கு வங்கத்தில் இரண்டு பேர் பலியாகினர். 35 பேர் காயம் அடைந்து உள்ளனர். 
 
நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் தேசிய பேரிடர் மேலாண்மை படை  மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.