வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Updated : திங்கள், 4 ஜனவரி 2016 (14:42 IST)

மணிப்பூரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 6 பேர் பலி

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.


 
 
இன்று காலை 4.30 மணியளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மணிப்பூரில் கட்டடங்கள் இடிந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
மணிப்பூரை மையமாக கொண்டு இந்தியா - மியான்மர் எல்லைப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூரின் மேற்கு, வடமேற்கு பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக இருந்ததாகவும் தெரிகிறது. மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டுளளது. இதனால் மணிப்பூரில் இருக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும், மணிப்பூர் முதலமைச்சரை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, நிலைமை குறித்து கேட்டறிந்துள்ளார்.