வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 20 ஏப்ரல் 2017 (16:15 IST)

டிரம்ப் கையெழுத்தால் இந்திய ஐடி ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்-1பி விசா விதிமுறையில் மாற்றங்களை கொண்டு வந்ததால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  


 

 
டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் அதிரபாக பதவியேற்றவுடன் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்தார். அதில் முக்கியாமான ஒன்று, அமெரிக்கா குடிமக்களை அனைத்து துறைகளிலும் பணியில் அமர்த்துவது. 
 
இதற்காக எச்-1பி விசா விதிமுறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. இந்திய ஐடி நிறுவனங்கள், எச்-1பி விசா மூலம் இந்திய பொறியாளர்களை அமெரிக்காவிற்கு அனுப்பி குறைந்த செலவில் அதிகளவிலான லாபத்தைப் பெற்று வந்தது. இந்திய ஐடி சந்தைக்கு மிகமுக்கியமான வர்த்தகத் தளம் அமெரிக்கா.
 
தற்போது எச்-1பி விசா பெறும் ஒருவரின் அடிப்படை சம்பளம் குறைந்தபட்சம் 1,30,000 அமெரிக்க டாலராக இருக்க வேண்டும். இந்த விசா பிரச்சனையில் இருந்து விடுப்பட இந்திய ஐடி நிறுவனங்கள் அனைத்தும் தற்போது அமெரிக்க மக்களையும், அமெரிக்க கல்லூரிகளில் இருந்து வெளிவரும் மாணவர்களையும் பணியில் அமர்த்தும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
 
இதனால் இந்திய ஐடி நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை காத்துக்கொண்டாலும், லாபத்தை இழக்கும். இதனால் பல ஊழியர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.
 
இந்நிலையில் விசா கட்டுப்பாடுகள் குறித்து நாஸ்காம் மற்றும் மத்திய அரசு தொடர்ந்து அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.