திங்கள், 5 டிசம்பர் 2022
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified வியாழன், 29 செப்டம்பர் 2022 (12:44 IST)

பசி வந்தா ஸ்பூனை சாப்பிடுவேன்..! இளைஞர் வயிற்றை சோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி!

Spoon
உத்தர பிரதேசத்தில் வயிற்று வலி என வந்த இளைஞர் வயிற்றில் ஏராளமான ஸ்பூன்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் வைரலாகியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் முசாபர் பகுதியை சேர்ந்த 32 வயது நபர் ஒருவர் கடந்த சில காலமாக அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். வயிற்று வலிக்காக மருத்து, மாத்திரை எடுத்தும் அது குணமாகவில்லை. சில நாட்களுக்கு முன்னதாக அவருக்கு வயிற்று வலி அதிகரித்துள்ளது.

வலி தாளாமல் மருத்துவர்களிடம் சென்றுள்ளார் அந்த நபர். அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது வயிற்றில் ஏராளமான ஸ்பூன்கள் இருந்துள்ளன.


இதுகுறித்து கூறிய அவர் தனக்கு பசிக்கும்போதெல்லாம் ஸ்பூனை சாப்பிட்டால் பசி நின்று விடுவதால் ஸ்பூனை தொடர்ந்து சாப்பிட்டு வந்ததாக கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக ஸ்பூனின் கைப்பிடியை விரும்பி சாப்பிட்டுள்ளார்.

பிறகு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவரது வயிற்றிலிருந்து 62 ஸ்பூன்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். அவர் தற்போது நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.