வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Updated : வெள்ளி, 19 பிப்ரவரி 2016 (17:09 IST)

உல்லாசம் அனுபவிக்க கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய இன்ஸ்பெக்டர்

கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவில், வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து டாக்டர் வீட்டில் பணம், நகைகளை கொள்ளையடித்த கும்பலில் இருந்த பெண்ணுக்கும், பெங்களூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.


 
 
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் பசவந்தப்பா. இவர் தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மாதம் தன்னுடைய வீட்டில் தனியாக இருந்தபோது, ஒரு பெண்ணுடன் வந்த மர்ம கும்பல் நாங்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் என்று கூறி அதிரடியாக வீட்டிற்கு உள்ளே நுழைந்தனர் 
 
அப்போது, நீங்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளீர்கள் என்று கூறி அவருடைய வீட்டில் இருந்து ரூ.6.20 லட்சம் ரொக்கம், ரூ.1.68 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் ஆகியவற்றை கைப்பற்றினர். பின்னர், விசாரணைக்கு நீங்கள் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வரவேண்டு என்று கூறி அங்கிருந்து உடனடியாக சென்றுவிட்டனர், 
 
இதை நம்பி மறுநாள் அந்த டாக்டர்  விசாரணைக்காக வருமான வரித்துறை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு விசாரித்தபோது அதிகாரிகள் யாரும் உங்கள் வீட்டில் சோதனை நடத்த வரவில்லை என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
 
இந்நிலையில், தன்னுடைய வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து மர்ம நபர்கள் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்று விட்டதை உணர்ந்தார். பின்னர், இதுகுறித்து சிக்கமகளூரு, பசவந்தப்பா கடூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
 
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர்......
 
                                        மேலும் படிக்க அடுத்தப்பக்கம் பார்க்க

மதுசூதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது . 
 
தனிப்படை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், டாக்டர் வீட்டிற்கு வந்து கொள்ளையடித்த கும்பல் குறித்து துப்பு கிடைத்தது. கொள்ளை கும்பலில் வந்த பெண் பெங்களூரு உத்தரஹள்ளியைச் சேர்ந்த பவித்ரா என்பது தெரியவந்தது. அவரிடம் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.


 
 
அந்த பெண்ணிடம் நடத்திய தீவிர விசாரணையில், கொள்ளைக்காரியான பவித்ரா ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், அந்த பெண்ணிற்கும் பெங்களூரு நகரில் இருக்கும் ஒரு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் பாப்பண்ணா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உடன் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில், இன்ஸ்பெக்டரும், அவருடைய கள்ளக்காதலியான பவித்ராவும்  சேர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

அப்போது தான், தங்களுடைய பணத் தேவைக்காக இருவரும் சேர்ந்து பல திட்டங்களை அரங்கேற்றியுள்ளனர். அதில், வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த திட்டத்திற்காக திருட்டு வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் இருந்து வெளியே வந்த சரண், விஷ்வநாத், ஹேமந்த், உள்பட 6 பேரை சேர்த்துக் கொண்டனர்.
 
இதையடுத்து, இவர்கள் அனைவரும் சேர்ந்து திட்டமிட்ட படி டாக்டர் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். பின்னர், பவித்ரா கூறிய தகவல்களை வைத்து அவருடைய வீட்டிலும் தனிப்படை போலீசார் சோதனை நடத்தியதில், பல லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை கைப்பற்றினர், மேலும், அந்த பெண் இன்ஸ்பெக்டர் பாப்பண்ணாவுடன் நெருக்கமாக இருப்பதுபோன்ற புகைப்படங்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

அதை வைத்தும், அவருக்கும் இன்ஸ்பெக்டருக்கும் இடையே நடந்த செல்போன் உரையாடல்களை வைத்தும், அவர்கள் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது என்று தனிப்படையில் இருக்கும் தலைமை போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
எனவே இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் பாப்பண்ணாவை முக்கிய குற்றவாளியாக சேர்க்கவும், அவரிடம் விசாரணை நடத்த அனுமதி கோரியும் கர்நாடக மாநில தலைமை காவல் துறை அதிகாரிக்ரகு கடிதம் எழுதி இருக்கிறேன், அனுமதி வழங்கியவுடன் இன்ஸ்பெக்டர் பாப்பண்ணாவிடம் தீவிர விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார். மேலும், இந்த கும்பல் இதுபோல் எத்தனை இடங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார்கள் என்பதும் விசாரணைக்கு பின்னர் தான் தெரிய வரும் என்று கூறியுள்ளார்.
 
இந்த வழக்கில் இதுவரையில் பவித்ரா, சரண், விஷ்வநாத், ஹேமந்த் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரை தனிப்பைட போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர். பெங்களூரில் டாக்டர் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட பெண்ணுக்கும், போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது கர்நாடக காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.