1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : புதன், 15 ஏப்ரல் 2026 (08:36 IST)

ஜெய் ஸ்ரீ ராம் சொன்னா ரூ.500 தள்ளுபடி!.. பிரபல மருத்துவரின் அறிவிப்பால் பரபரப்பு!...

doctor
இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளில் பாரதிய ஜனதா கட்சியும் ஒன்று. தமிழ்நாட்டில் அதிமுக, திமுகவும் மோதிக்கொள்வது போல தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் மோதிக் கொள்கிறது. இதில் காங்கிரஸ் விடுதலை போராட்ட வீரர்கள் துவங்கிய கட்சி எனவும் பாஜக ஆர்எஸ்எஸ் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது எனவும் அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

குறிப்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பும் பாரதிய ஜனதா கட்சியும் இந்து மதத்தை தூக்கு பிடித்து அரசியல் செய்கிறது.. இந்து மதத்தை முன்னிறுத்தியே அந்த கட்சி பிரச்சாரம் செய்கிறது... குறிப்பாக வட மாநிலங்களில் ஸ்ரீராமரை காட்டிய பாஜக பல வருடங்களாக வெற்றி பெற்று வருகிறது.. அதனால்தான் பல வருடங்களுக்கு முன்பு அயோத்தியில் பாபர் மசூதி இடித்துவிட்டு ராமர் கோயில் கட்டினார்கள்..

அதேபோல் ஜெய் ஸ்ரீ ராம் என்பது பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கை முழக்கமாகவே பார்க்கப்படுகிறது.இந்நிலையில்தான் கொல்கத்தாவில் ஜெய் ஸ்ரீ ராம் என சொல்லும் நோயாளிகளுக்கு கட்டணத்தில் 500 ரூபாய் தள்ளுபடி என ஹஸ்ரா எனும் பிரபல மருத்துவர் அறிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

பாஜக கொடி, தொப்பியை அணிந்தவாறு மருத்துவர் ஹஸ்ரா வெளியிட்ட அறிவிப்புக்கு கடும் விமர்சனங்கள் எழுத நிலையில் இந்திய மருத்துவ சங்கம் அவர்களின் செயலுக்கு விளக்கம் கேட்டிருக்கிறது..