வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 10 நவம்பர் 2015 (05:10 IST)

பீகாரை நினைத்து நாடாளுமன்றத்தை முடக்கிடாதீங்க... நாயுடு கதறல்

பீகார் சட்ட மன்றத் தேர்தல் வெற்றியை மனதில் வைத்துக் கொண்டு, நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கக் கூடாது என்று வெங்கைய்யா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

 
நியூ டெல்லியில், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் 26 ஆம் தேதி முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.
 
அப்போது, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கைய்யா நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
பீகார் சட்ட மன்ற தேர்தல் முடிவுகள், அம்மாநில மக்களின் விருப்பத்தை மட்டுமே பிரதிபலித்துள்ளது. இது ஒட்டுமொத்த இந்திய மக்களின் கருத்து அல்ல. எனவே, இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கக் கூடாது. அவ்வாரு செய்வது ஜனநாயகம் கிடையாது. ஜனநாயகம் தலைக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.