ஆர்.கே.ஸ்ரீவத்சவா டிஸ்மிஸ் - மத்திய அரசு அதிரடி

ஆர்.கே.ஸ்ரீவத்சவா டிஸ்மிஸ் - மத்திய அரசு அதிரடி


K.N.Vadivel|
இந்திய விமான நிலையங்கள் ஆணையத் தலைவர் ஆர்.கே.ஸ்ரீவத்சவாவை மத்திய அரசு அதிரடியாக பதவி நீக்கம் செய்துள்ளது.
 
 
இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் கீழ் 125 விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் 18 சர்வதேச விமான நிலையம், 78 உள்நாட்டு விமான நிலையம் உள்ளிட்ட 26 சிவில் போக்குவரத்து விமான நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
 
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஸ்ரீவத்சவா கடந்த ஆண்டு ஜனவரி 2-ம் தேதி இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றார். அவர் பதவியேற்று 15 மாதங்களே ஆனநிலையில், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவர் பதவியில் இருந்து ஸ்ரீவத்சவா திடீரென அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
 
இது குறித்து, விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா கூறுகையில், விரைவில் அந்த பதவிக்கு புதியவர் நியமிக்கப்படுவார் என்றார். ஆனால், ஸ்ரீவத்சவா நீக்கத்திற்கான காரணத்தை அவர் வெளிப்படையாக கூறவில்லை. 


இதில் மேலும் படிக்கவும் :