திருமணத்திற்கு மறுப்பு; காதலன் மீது ஆசிட் வீசிய காதலி


லெனின் அகத்தியநாடன்| Last Modified சனி, 17 அக்டோபர் 2015 (21:01 IST)
திருமணத்திற்கு மறுத்த காதலன் மீது காதலி ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
 
 
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலியை பகுதியைச் சேர்ந்தவர் கீதாஞ்சலி (30). திருமணமானவர். கீதாஞ்சலி அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரலு (23) என்பவருடன் காதல் கொண்டார். வெங்கடேஸ்வரலு கீதாஞ்சலியை விட 7 வயது இளையவரானவர்.
 
இதனால், இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இதற்கிடையில், வெங்கடேஸ்வரலுவிடம் கீதாஞ்சலி பணம் வாங்கியுள்ளார். பின்னர், தனக்கு திருமணம் நடக்க இருப்பதாகக் கூறி வெங்கடேஸ்வரலு கீதாஞ்சலியிடம் திருப்பி கேட்டுள்ள்ளார்.
 
இதனையடுத்து கீதாஞ்சலி பணம் தருவதாக கூறி இரவு வீட்டிற்கு அழைத்துள்ளார். அதன்படி வெங்கடேஸ்வரலு இரவு கீதாஞ்சலி வீட்டுக்கு சென்றார். அப்போது ஏற்பட்ட தகராறில் வெங்கடேஸ்வரலு மீது கீதாஞ்சலி ஆசிட்டை வீசியுள்ளார்.
 
இதில், வெங்கடேஸ்வரலுவின் முகம் மற்றும் உடல் முழுவதும் வெந்தது. உடனே, குண்டூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தெனாலி நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கீதாஞ்சலியை தேடி வருகிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :