செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 27 மார்ச் 2017 (15:26 IST)

உத்திரப்பிரதேசத்தில் முதல்வர் உத்தரவால் அசைவ உணவுக்கு தட்டுபாடு

உத்திரப்பிரதேசத்தில் இறைச்சிக் கடைக்காரர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் காலவரையற்ற கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதால், அசைவ உணவுக்கு தட்டுபாடு நிலவி வருகிறது.


 

 
உத்திரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவி ஏற்ற ஒரே வாரத்தில் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதில் முக்கியமான சில உத்தரவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
சட்டவிரோதமாக பசுவதை செய்யும் கூடங்களை மூட வேண்டும், பசுக் கடத்தல் தடுப்பு. இந்த உத்தரவுக்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 
 
இதை எதிர்த்து இறைச்சிக் கடைக்காரர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் காலவரையற்ற கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் அசைவ உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் மாநில பாஜக தலைவர் மஸார் அப்பாஸ் இறைச்சி கடைக்காரர்களுக்கு போராட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
முதல்வரின் உத்தரவு சட்ட விரோதமாக இறைச்சிக் கடை நடத்துவோரைத்தான் பாதிக்கும், நேர்மையாக இருப்பவர்கள் அதுபற்றிக் கவலைப்படத் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.