நெருக்கமானப் புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டிய காதலன் – காதலி தற்கொலை !

Last Modified ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (09:56 IST)
டெல்லியில் தன்னைக் காதலிப்பதை நிறுத்திய காதலன் மிரட்டியதால் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

டெல்லியில் தந்தையை இழந்த பெண் ஒருவர் தன் தாயோடு வசித்து வருகிறார். இவர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். ஆனால் இடையில் ஏற்பட்ட பிரச்சனைக் காரணமாக காதலை முறித்துள்ளார். இதனால் கோபமான அந்த வாலிபர் அந்த பெண்ணிடம் தன்னைக் காதலிக்கும் படி வலியுறுத்தியுள்ளார்.

அப்படிக் காதலிக்காவிட்டால் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் விரக்தியடைந்த அந்த பெண் தன்னுடைய தோழியை வீட்டுக்கு ஏதாவது உணவுப் பொருட்கள் வாங்கி வர சொல்லியுள்ளார்.

அவர் வந்து கதவை தட்டிப்பார்த்தபோது கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் தோழியின் தாய்க்கு அழைத்து சொல்லியுள்ளார். அதன் பின் அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து பார்த்தபோது அந்த இளைஞி தூக்குமாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதைப்பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைய போலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அந்த இளைஞன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :