வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Updated : திங்கள், 19 அக்டோபர் 2015 (14:54 IST)

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சிறார்களுக்கான வயது வரம்பு 15 ஆக குறைக்க கெஜ்ரிவால் திட்டம்

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சிறார்களுக்கான வயது வரம்பை 15ஆக குறைக்க பரிந்துரைக்கபட உள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார்.
 


 

 

இன்று டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சிறார்களுக்கான வயது வரம்பை குறைக்க பரிந்துரைக்கப் பட்டுள்ளதாகவும்

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு ஆயுள், மரண தண்டனை அளிக்க ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும்,டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது குறித்து பரிந்துரைக்க குழு அமைக்க டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சிறார்களுக்கு 15 வயதாகக் குறைக்க டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டு இருக்கிறார்,

மேலும், மணிஷ் சிசோடியா தலைமையில் பரிந்துரை குழு அமைக்கப்பட்டு பாலியல் குற்றங்கள் குறித்து ஆய்வு செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார். பெண்களுக்கு எதிராக நடக்கு பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது குறித்து தற்போது டெல்லி அரசு தீவிர நடவடிக்கையை மேற்க்கொண்டு வருகிறது. நேற்று முன்தினம் டெல்லியின் புறநகர் பகுதியில் 2 சிறுமிகளை பாலியல் பாலத்காரம் செய்யப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.