ரெட் சிக்னலின் வண்டிகள் ஆஃப்: நடைமுறைக்கு வரும் புதிய ரூல்!

Sugapriya Prakash| Last Modified புதன், 13 அக்டோபர் 2021 (13:03 IST)
வரும் 18 ஆம் தேதி முதல் சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது, வண்டிகளை அணைத்து வைக்கும் திட்டம். 
 
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான கால கட்டத்தில் டெல்லியில் கடுமையான காற்று மாசு பாட்டால் பெரும் சிரமங்களை அம்மாநிலம் 
சந்திக்கும். இதனை குறைக்க பல்வேறு திட்டங்களை டெல்லி அரசு மேற்கொண்டு வருகிறது.
 
அந்த வகையில் இந்த முறை காற்று மாசை குறைக்க வரும் 18 ஆம் தேதி முதல் சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது, வண்டிகளை அணைத்து வைக்கும் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வரும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
 
மேலும் பொது மக்கள் உடனடியாக இந்த திட்டத்தை செயல்படுத்த முன் வர வேண்டும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :