கும்பமேளா சென்றவர்களை கண்டுபிடிக்க உத்தரவு! – டெல்லி அரசு அதிரடி!

Gumba Mela
Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (09:09 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கும்பமேளா சென்றவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்த டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் வேகமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் லட்சங்களை தாண்டியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் லட்சக்கணக்கில் கும்பமேளாவில் பலர் கலந்து கொண்ட நிலையில் அதில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 4 முதல் 13 வரை டெல்லியில் இருந்து கும்பமேளா சென்றவர்களை கண்டறிந்து கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்த டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :