1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Dead Man Walking: Miner Returns Home Alive After Final Rites in Assam

இறந்ததாக அறிவிக்கப்பட்டு இறுதி சடங்குகள் நடத்திய பின்னர் உயிருடன் வந்த நபர்.. என்ன நடந்தது?

மேகாலயா சுரங்க விபத்து
மேகாலயாவில் நிகழ்ந்த சுரங்க வெடிப்பில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு, இறுதிச்சடங்குகள் செய்து முடிக்கப்பட்ட தொழிலாளி ஒருவர் உயிருடன் வீடு திரும்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி கிழக்கு ஜெயந்தியா ஹில்ஸ் பகுதியில் உள்ள  ஒரு சுரங்கத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 31 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. இதில் அசாம் மாநிலம் ஸ்ரீபூமி மாவட்டத்தை சேர்ந்த ஷியாம் பாபு சின்ஹாவும் ஒருவர் என அடையாளம் காணப்பட்டார்.
 
அதிகாரிகள் ஒப்படைத்த உடலை அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டு முறைப்படி இறுதிச்சடங்குகளை செய்து முடித்தனர். ஆனால், சில நாட்களுக்கு பிறகு சின்ஹா திடீரென உயிருடன் வீடு திரும்பியதை கண்டு உறவினர்கள் உறைந்து போயினர். 
 
தவறான அடையாளத்தின் அடிப்படையில் வேறு ஒருவரின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது இப்போது தெரியவந்துள்ளது. இந்த குளறுபடி குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, சுற்றுச்சூழல் விதிகளை மீறி செயல்பட்ட இந்த சட்டவிரோத சுரங்க விபத்து குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் மேகாலயா அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
Edited by Siva
About Writer
Siva