முன்னாள் மத்திய அமைச்சர் வீட்டில் மர்மமான ஆண் பிணம்

Ilavarasan| Last Modified திங்கள், 11 ஆகஸ்ட் 2014 (20:46 IST)
காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான குமாரி செல்ஜா வீட்டில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
42 வயதான சஞ்ஜய் என்ற அந்த நபர் செல்ஜாவின் வீட்டில் வேலை செய்பவரின் கணவர் என்று கூறப்படுகிறது. காவல்துறையினருக்கு வந்த தொலைபேசி தகவலையடுத்து உள்ளூர் காவல் துறை அதிகாரிகளும், குற்றப்பிரிவு மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் குழுவும் செல்ஜாவின் வீட்டுக்கு விரைந்து சென்றது. செல்ஜாவின் வீட்டிலுள்ள வேலைக்காரர்கள் குடியிருப்பில் சஞ்ஜய்யின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர்.
சஞ்ஜய்யின் மரணம் இயற்கைக்கு மாறானதாக இருப்பதால், அவரது மரணம் குறித்து விசாரித்து வருவதாக கூடுதல் காவல் ஆணையர் தியாகி கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :