சுடுகாடுகள் நிரம்பியதால் நடைபாதையில் எரிக்கப்படும் சடலங்கள்: உபியில் பரபரப்பு!

சுடுகாடுகள் நிரம்பியதால் நடைபாதையில் எரிக்கப்படும் சடலங்கள்
siva| Last Updated: திங்கள், 19 ஏப்ரல் 2021 (17:10 IST)
சுடுகாடுகள் நிரம்பியதால் நடைபாதையில் எரிக்கப்படும் சடலங்கள்
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆயிரக்கணக்கில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று உத்தரப்பிரதேசம். இங்கு தினமும் நூற்றுக்கணக்கான கொரோனாவுக்கு பலியாகி வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் உள்ள இடுகாடுகள் நிரம்பியதால் நடைபாதைகளில் சடலங்கள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் ஏப்ரல் மாதத்தில் காசியாபாத் நகரில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் இரண்டு பேர்கள் மட்டுமே என நகர தலைமை சுகாதார அதிகாரி கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :