1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 23 செப்டம்பர் 2015 (01:56 IST)

கொல்கத்தா சாலைக்கு டால்மியா பெயர்: மம்தா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தாவில் உள்ள சாலைக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஜக்மோகன் டால்மியா பெயர் வைக்கப்படும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
 

 
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஜக்மோகன் டால்மியாவுக்கு (75) கடந்த வியாழக்கிழமை அன்று இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
 
இதனையடுத்து, அவர் கொல்கத்தாவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு சோதனைகள் நடத்தினர்.
 
இதனையடுத்து, ஜக்மோகன் டால்மியாவின் இதய வால்வில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. பின்பு, இதய சிகிச்சை நிபுணர் அடங்கிய மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது, அரவது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், எதிர்பாரதவிதமாக அவர் மரணடைந்தார்.
 
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் டால்மியாவை கௌவுரவிக்கும் வகையில், கொல்கத்தாவில் உள்ள சாலைக்கு அவரது பெயர் சூட்ட மேற்கு வங்காள அரசு முடிவு செய்துள்ளது.
 
இது குறித்து, கொல்கத்தா முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கிடைத்த அற்புத தலைவர் டால்மியா. அவரது மறைவு கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு பெரிய இழப்பாகும். அவரது முயற்சியால், இந்திய கிரிக்கெட் அணி பல வெற்றிகளை குவித்துள்ளது. எனவே, டால்மியாவை கௌவுரவிக்கும் வகையில் கொல்கத்தாவில் உள்ள சாலைக்கு அவரது பெயர் வைக்கப்படும் என்றார். மேலும், கொல்கத்தாவில் அவருக்கு சிலை வைத்து மரியாதை செய்யப்படும் என்றார். 

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்புக்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.