செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 1 ஜூலை 2014 (16:31 IST)

சமையல் எரிவாயு விலை உயர்வு

பெட்ரோல் விலை உயர்வைத் தொடர்ந்து, மானியம் பெறாத சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.16.50 உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.69, டீசல் விலை லிட்டருக்கு ஐம்பது பைசா உயர்த்தி எண்ணை நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டன. இந்நிலையில் மானியம் பெறாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை, ரூ.16.50 உயர்த்தி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

விமான எரிபொருள் விலையும் 0.6 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈராக்கில் நடைபெற்றுவரும் உள்நாட்டு போரால் கச்சா எண்ணை விலை உயர்ந்துள்ளதாகவும், அதனால் இந்தியாவில் எரிபொருள் விலை அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.

வீடுகளுக்கு ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மானியத்துடன் வழங்கப்படுகிறது. இதற்கு மேல் வாங்கப்படும் சிலிண்டர்களுக்கு மானியம் கிடையாது.

14.2 கிலோ எடை கொண்ட மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இதுவரை 906 ஆக இருந்துவந்தது. இன்றைய விலையேற்றத்திற்கு பிறகு அது ரூ.922.50 ஆக உயர்ந்துள்ளது.