ஞாயிறு, 16 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 7 அக்டோபர் 2025 (13:46 IST)

ஆற்றில் துணி துவைத்த பெண்ணை முதலை இழுத்துச் சென்ற பயங்கரம்!

ஆற்றில் துணி துவைத்த பெண்ணை முதலை இழுத்துச் சென்ற பயங்கரம்!
ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆற்றங்கரை கிராமத்தில்  முதலை ஒன்று  ஒரு பெண்ணைக் ஆற்றுக்குள் இழுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
 
ஒடிசா மாநிலம் பாரி வட்டாரத்தில் உள்ள போடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கான்டியா என்ற கிராமத்திற்கு அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுகதேவ் மகாலாவின் மனைவியான சௌதாமினி மகாலாவும் , கராஸ்ரோடா ஆற்றுக்கு துணி துவைப்பதற்காக சென்றிருந்தார். அவர் துணி துவைத்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஆற்றிலிருந்து வந்த ஒரு முதலை சௌதாமினி மகாலாவை தாக்கியது.
 
தாக்குதலுக்குள்ளான அவர், சற்றும் சுதாரிப்பதற்குள், முதலை அந்த பெண்ணை ஆற்றுக்குள் இழுத்து சென்றது. இந்த கொடூர சம்பவத்தால் ஆற்றங்கரையில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர். கிராம மக்கள் உடனடியாக ஆற்றின் அருகே திரண்டு, அந்த பெண்ணைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
இச்சம்பவம் அக்கிராம மக்களிடையே பெரும் பதற்றத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆற்றில் துணி துவைக்க சென்ற பெண்ணை முதலை இழுத்து சென்றது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
 
Edited by Siva