வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 20 நவம்பர் 2015 (12:15 IST)

பசுவை கொல்பவர்களுக்கு இந்தியாவில் வாழ உரிமை இல்லை : சொல்வது காங்கிரஸ் முதலமைச்சர்

பசுவை கொல்பவர்களுக்கு இந்தியாவில் வாழ உரிமை இல்லை என்று உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் முதலமைச்சர் ஹரிஷ் ராவத் கருத்து தெரிவித்துள்ளார். இது மீண்டும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.


 
 
சமீபத்தில் பாஜகவினர் இந்தியாவில் யாரும் மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்ற முழக்கத்தை கையிலெடுத்தார்கள். உத்திரப்பிரதேசத்தில் தாத்ரி எனும் கிராமத்தில், மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக  ஒரு முதியவர் அடித்துக் கொல்லப்பட்டார். அந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
இதுகுறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் பாஜக-விற்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர். பாஜக வின் பிரதான எதிரியான காங்கிரஸ் தலைவர்கள் இதை வன்மையாக கண்டித்தனர்.
 
இதுவரை பாஜாக-வைச் சேர்ந்தவர்கள் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று கருத்து தெரிவித்து வந்தார்கள். ஆனால் உத்தர்காண்ட் மாநில காங்கிரஸ் முதலமைச்சர் ஹரிஷ்ராவத் பசுக்களை கொல்லக்கூடாது என்று கருத்து கூறியுள்ளார்.
 
ஹரித்துவாரில் நடைபெற்ற  ஒரு விழாவில் பேசிய அவர் “பசுவை கொல்பவர்களுக்கு இந்தியாவில் வாழ உரிமை கிடையாது. பசுவை கொல்பவர்கள் யாராக இருந்தாலும், எந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும், அவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய எதிரி. அவர்களுக்கு நாட்டில் வாழ உரிமை கிடையாது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பசுவை கொல்பவர்களை சட்டம் பார்த்துக் கொள்ளும், பசுக்களை பாதுகாக்க மாநில அரசு எதனையும் செய்யும்” என்று பேசியிருக்கிறார். 
 
அவரின் இந்த பேச்சு காங்கிரஸ் நிலைப்பாட்டிற்கு எதிராக அமைந்துள்ளது. மாட்டுக்கறி விஷயத்தில் பாஜகாவை எதிர்த்து வந்தது காங்கிரஸ். இப்போது அந்த கட்சியை சேர்ந்த ஒரு முதலமைச்சரே இப்படி பேசியிருக்கிறார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.