வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 5 டிசம்பர் 2020 (11:40 IST)

இந்தியாவில் 96 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!!

உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளை விட வேகமாக குணமாகி வருகிறது.
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. 
 
கடந்த 24 மணி நேரத்தில் 36,652 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 96,08,211 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 512 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,39,700 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் தொற்றில் இருந்து ஒரே நாளில் 42,533 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 90,58,822 ஆக உயர்ந்துள்ளது.
 
மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,09,689 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குணமடைந்தோர் விகிதம் 94.20% ஆகவும் உயிரிழந்தோர் விகிதம் 1.45% ஆகவும் குறைந்துள்ளது.