3 லட்சத்தை நெருங்கிய தினசரி பாதிப்புகள் – இந்தியாவை திணறடிக்கும் கொரோனா!

இந்தியாவில் முதல்முறையாக ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!
Prasanth Karthick| Last Modified புதன், 21 ஏப்ரல் 2021 (10:04 IST)
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் ஒரு நாள் பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மாநிலம் தோறும் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 2,95,041 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,56,16,130 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 2,023 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,82,553 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,32,76,039 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 21,57,538 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :