வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Geetha Priya
Last Updated : சனி, 19 ஏப்ரல் 2014 (11:32 IST)

சர்ச்சை பயத்தால் மோடியின் வாழ்க்கை படத்தை திரையரங்குகள் ரத்து செய்தன

பாஜக வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட  ‘நமோ சௌனே கமோ’ (Namo Saune Gamo ) திரைப்படத்தை வெளியிட  தடை விதிக்க கோரி காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி  தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளன. 
குஜராத்தி மொழியில் எடுக்கப்பட்ட இந்த  திரைப்படம் அம்மாநிலம் முழுவதும் நேற்று திரையிடப்படுமென விளம்பரப்படுத்தபட்டிருந்தது. ஆனால், சர்ச்சைக்குரிய இந்த திரைப்படத்தை திரையிட்டால் அசம்பாவிதங்கள் நடைபெறுமென்ற அச்சத்தில் திரையரங்கு உரிமையாளர்களே இந்த திரையிடல்களை ரத்து செய்ததாக தெரிகிறது. 
 

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் அளித்த புகாரில், இந்த திரைப்படம் மோடியை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் கதாநாயகனாக நடித்திருப்பவர் மோடியை போன்ற தோற்றமுடையதால், மக்கள் மத்தியில் மறைமுகமான தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவே இது நடத்தப்படுகிறது. 
 
இவ்விவகாரத்தில் பாஜக-வின் பங்கு ஏதுமில்லாதது போல் காட்டிக் கொண்டு, இந்த விளம்பர செலவு முழுவதும் அந்த திரைப்படத்தின்  தயாரிப்பாளருடையது என்று காட்டிக் கொள்ள நினைக்கும் அக்கட்சியின் போக்குக்கு தேர்தல் ஆணையம் இடம் அளித்துவிடக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதே போன்று ஆம் ஆத்மி கட்சி சார்பிலும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.