வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 6 ஜூன் 2015 (08:51 IST)

ஜூன் 9ஆம் தேதி: டெல்லியில் காங்கிரஸ் மாநில முதலமைச்சர்கள் கூட்டம்

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள 9 மாநிலங்களின் முதலமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.
 
இந்தியாவில், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களின் முதலமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இக் கூட்டம், டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் ஜூன் 9ஆம் தேதி நடைபெறுகிறது.
 
இந்த கூட்டத்திற்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்குகிறார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள 9 மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
 
இக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் எதிர்கால திட்டம், மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள்,  பிரசார யுக்தி போன்ற பல முக்கிய ஆலோசனைகள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
 
பாஜகவுக்கு இணையாக காங்கிரஸ் கட்சியும், தன்னை வலிமைப்படுத்திக் கொள்ள கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதையே இது காட்டுகின்றது.