பாகுபலி ரீமேக் வீடியோவில் கலக்கும் மோடி, உத்தரகண்ட் முதல்வர்: தேர்தலை முன்னிட்டு வெளியீடு!!


Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (12:55 IST)
உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், முதல்வர் ஹாரிஸ் ராவத் பாகுபலியாக சித்தரிக்கப்பட்டுள்ளார். 

 
 
உத்தரகண்ட் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் ஆளும் கட்சியான காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜக இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. 
 
இந்நிலையில், பாகுபலி போன்று இந்த மாநிலத்தை காப்பாற்ற தகுதியானவர் முதல்வர் ஹாரிஸ்தான் என்று காங்கிரஸ் கட்சி வீடியோ ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளது.
 
இந்த வீடியோவில் பாகுபலியில் நடிகர் பிரபாஸ் ஏற்று இருக்கும் வேடத்தை ஹாரிஸ் ஏற்றுள்ளார். இவருடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் சில நொடிகள் தோன்றி மறைகின்றனர்.
 
இந்த வீடியோ தற்போது வைரலாகி இணையதளத்தில் வருகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :