1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 29 ஜூன் 2020 (21:20 IST)

டிக் டாக் உட்பட 59 சீன செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி

டிக்டாக், யூசி புரௌசர் உள்பட சீன நிறுவனங்களின் 59 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்திய, சீன எல்லையான கால்வான் என்ற பகுதியில் சமீபத்தில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஏற்கெனவே சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்படலாம் என்று மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளிவந்தது
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான மத்திய அரசின் உத்தரவின்படி டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம், கேம் ஸ்கேனர், க்ளீன் மாஸ்டர், வீ-சாட் உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் இந்த செயலிகளின் கோடிக்கணக்கான பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் பாதுகாப்பு கருதி மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவுக்கு நாடு முழுவதும் வரவேற்பு கிடைத்துள்ள்து