வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sasikala
Last Updated : வியாழன், 14 ஜனவரி 2016 (17:58 IST)

உறைநிலை கருமுட்டையை பதப்படுத்தி குழந்தை பெற்ற இந்திய அழகி

8 ஆண்டுகளாக உறைய வைக்கப்பட்ட கரு முட்டை மூலம் இந்திய அழகி குழந்தை பெற்றார்.


 
 
இந்திய முன்னாள் அழகி டயானா ஹைடன் (42). இவர் கடந்த 1992-ம் ஆண்டு இந்திய அழகி பட்டம் வென்று பின்னர் உலக அழகி ஆனார்.
 
அதன் பின்னர் அவர் மிகவும் பிசி-ஆனதால் திருமணத்தை தள்ளி வைத்தார். எனவே, குழந்தை பெற வசதியாக கடந்த 2007-ம் ஆண்டில் 32-வது வயதில் தனது கரு முட்டைகளை சேகரித்து மும்பையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் உறைந்த நிலையில் வைத்திருந்தார். மொத்தம் 16 கரு முட்டைகளை இவ்வாறு வைத்து பாதுகாத்து வந்தார்.
 
இந்த நிலையில் அவர் தனது 40-வது வயதில் அதாவது 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை சேர்ந்த கொலிண்டிக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகுதான் இவருக்கு எண்டோ மெட்டிராசிஸ் என்ற நோய் இருந்தது தெரிய வந்தது.
 
இந்த பாதித்தவர்களின் கருப்பையில் இருந்து முதிச்சியுற்ற தரமான முட்டைகளை உருவாக்க முடியாது, அதன் மூலம் குழந்தை பேறுக்கு வாய்ப்பு இல்லாத நிலை ஏற்படும். எனவே, அவர் தான் ஏற்கனவே 8 ஆண்டுகளாக உறைய வைத்துருந்த கருமுட்டைகளை செயற்கை முறையில் குழந்தை பெற பயன்படுத்தினார்.
 
இதில் மும்பையை சேர்ந்த கருவில் டாக்டர்கள் யால்சேட்கர் மற்றும் கிரிசிகேஷ் பாய் உள்ளிட்டோர் மருத்துவ சிகிச்சையின் மூலம் டயானா ஹைடன் கர்ப்பம் ஆனார். அதைதொடர்ந்து அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது, அதற்கு ஆர்யா ஹைடன் என பெயர் சூட்டியுள்ளார். குழந்தை 3.7 கிலோ எடையுடனும், 55 செ.மீட்டர் ந்ளமாகவும் ஆரோக்கியத்துடன் உள்ளது.