வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (05:50 IST)

ஜாக்கிரதை! இந்தியாவில் 12ஆயிரம் பேர் இந்த நோயால் பாதிப்பு

நாடு முழுவதும் 12 ஆயிரம் பேருக்கு சிக்குன் குன்யா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய நோய்க் கட்டுப்பாடு அமைப்பு கூறியுள்ளது.
 

 
கொசுவின் மூலம் பரவும் சிக்குன் குன்யா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான காய்ச்சலும் மூட்டு வலியும் சிக்குன் குன்யாவின் அறிகுறிகளாக கூறப்படுகிறது. முறையான சிகிச்சை அளிக்கப்படாத பட்சத்தில், உயிரிழப்பு நேரவும் வாய்ப்புஉண்டு. 
 
அண்மையில் தில்லியில் சிக்குன் குன்யா மற்றும் மலேரியா காய்ச்சல் பரவியது. இதுவரையில் சிக்கன் குன்யா பாதிப்பிற்கு தில்லியில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
நீர்மூலம் பரவும் தேசிய நோய்க் கட்டுப்பாடு அமைப்பின் அறிக்கையின்படி, நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-வரை மட்டும் 12 ஆயிரத்து 255 பேர் சிக்குன் குன்யாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
அதிகபட்சமாக கர்நாடக மாநிலத்தில் 8 ஆயிரத்து 941 பேர் சிக்குன் குன்யாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.