1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 23 பிப்ரவரி 2016 (23:59 IST)

கருத்துரிமைக்கு எதிராக சத்தீஸ்கர் அரசு

கருத்துரிமைக்கு எதிராக சத்தீஸ்கர் அரசு

கருத்துரிமைக்கு எதிராக சத்தீஸ்கர் அரசு செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


 

சத்தீஸ்கர் அரசு, பத்திரிகையாளர் மாலினி சுப்ரமணியத்தை சத்தீஸ்கரை விட்டு வெளியேற்றி உள்ளது. பழங்குடி மக்களுக்காக போராடிய சோனி சோரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 
கடந்த ஆண்டு ஜூலையிலும், செப்டம்பரிலும், சத்தீஸ்கர் பத்திரிகையாளர்களான சோமரு நாக் மற்றும் சந்தோஷ் யாதவ் மீது சத்தீஸ்கர் அரசு பொய் வழக்கு போட்டு சித்தரவதை செய்தது.
 
பத்திரிகையாளர்கள் கைதை கண்டித்து சத்திஸ்கர் பத்திரிகையாளர் அமைப்பு போராட்டம் நடத்தியது. சர்வேதச அளவிலும் கண்டனம் எழுந்தது. அப்போது கார்ட்டுனிஸ்ட் அசிம் திரிவேதி, பத்திரிகையாளர் போராட்டத்தை ஆதரித்தும். சோமரு நாக் மற்றும் சந்தோஷ் யாதவ் ஆகியோரை விடுதலை செய்யக் கோரியும், காவல் துறையின் ஒடுக்குமுறையை கண்டித்தும் ஓவியங்கள் வரைந்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.