சென்னை ஐ.ஐ.டி.மாணவர் அமைப்புக்கு தடை: ராகுல் காந்தி கண்டனம்

Rahul Gandhi
Last Modified சனி, 30 மே 2015 (00:50 IST)
சென்னை ஐ.ஐ.டி.மாணவர் அமைப்புக்கு தடை விதித்த சம்பவத்திற்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார்.

 
பிரதமர் நரேந்திர மோடியை கடும் விமர்ச்சனம் செய்த காரணத்தினால், சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் அமைப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 
 
இந்த அங்கீகார ரத்து நடவடிக்கையை, மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எடுத்துள்ளார் என தகவல் வெளியானது.
 
இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பைச்சேர்ந்த மாணவர்கள்,  டெல்லியில் உள்ள மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இல்லத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும், மாநிலத்தில் பல பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் வெடிக்கும் சூழ்நிலை நிலவுகிறது.
 
இந்த நிலையில் மாணவர் அமைப்புக்கு தடை விதித்த சம்பவத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார்.
 
இந்தியாவில், சுதந்திர பேச்சுரிமை மற்றும் விவாதத்திற்கு பாஜக அரசு தடை விதித்தால் அதனை எதிர்த்து நாங்கள் போராடுவதை தவிர வேறு வழி இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :