காசு பிரச்சினையில்ல.. கொரோனா வரக்கூடாது! – தடுப்பூசி செலவை ஏற்கும் சத்தீஸ்கர் அரசு!

Prasanth Karthick| Last Modified புதன், 21 ஏப்ரல் 2021 (17:27 IST)
இந்தியா முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் சத்தீஸ்கரில் தடுப்பூசி போடும் செலவை அரசே ஏற்பதாக அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முன்னதாக அவசரகால தடுப்பூசிகளாக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டன. முதற்கட்டமாக 60 வயதிற்கு மேலானவர்களுக்கும், இரண்டாம் கட்டமாக 45 வயதிற்கு மேலானவர்களுக்கும் இந்த தடுப்பூசி போடப்பட்ட நிலையில் தற்போது மே 1 முதல் மூன்றாவது கட்டமாக 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் கோவிஷீல்டு நிறுவனம் தடுப்பூசியின் விலையையும் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மூன்றாவது கட்டமாக 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆகும் செலவை அந்த மாநில அரசே ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :