சையது கிலானியின் பாஸ்போர்ட் 4 வாரத்திற்கு முடக்கம்

சையது கிலானி
Bharathi| Last Modified புதன், 23 செப்டம்பர் 2015 (08:13 IST)
 பிரிவினைவாதத் தலைவர் சையது கிலானியின் பாஸ்போர்ட்டை 4 வார  காலத்திற்கு  முடக்குவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும்  இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் ஐம்மு காஷ்மீர் மாநிலத்தின் பிரிவினைவாதத் தலைவர் சையது கிலானி கலந்து கொள்ள வேண்டும் என்று அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
 
இந்நிலையில் இந்தக் கருத்தரங்கில் கிலானி கலந்து கொள்வதை தடுக்கும் வகையில் அவரது பாஸ்போர்ட் 1 மாதத்திற்கு முடக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
சர்ச்சைக்குரிய கருத்தக்களை கிலானி் தெரிவிப்பார் என்ற காரணத்தால் அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :