வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 25 பிப்ரவரி 2021 (15:32 IST)

சமூக வலைதளங்களுக்கு புதிய கட்டுபாட்டை விதித்த மத்திய அரசு!

சமூக வலைதளங்களுக்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது  மத்திய அரசு. 

 
சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய, அமைதியை குலைக்கக்கூடிய பதிவுகள் இடப்படுவது குறித்து பல நாட்களாக பலர் புகார் அளித்து வந்த நிலையில் மத்திய அரசு இன்று அதற்கான கட்டுப்பாடுகள் சிலவற்றை அறிவித்துள்ளது. அவை, 
 
1. இந்தியாவில் வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 53 கோடி, ஃபேஸ்புக் 41 கோடி, இன்ஸ்டாகிராம் 21 கோடி, ட்விட்டர் 1.75 கோடி ஆக உள்ளது.
2. ஒவ்வொரு சமூக வலைதள நிறுவனங்களும் மாதம் ஒரு முறை எவ்வளவு புகார்கள் வருகிறது என்பது சம்மந்தமான விரிவான தகவல் வழங்க வேண்டும்
3. புகாரளித்த 24 மணி நேரத்திற்குள் பெண்கள் குறித்த ஆபாச புகைப்படங்களை சமூகவலைதளம் நீக்க வேண்டும்
4. புகார்களை கையாள்வதற்காக ஒவ்வொரு சமூக வலைதள நிறுவனங்களும் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும்
5. தவறான தகவலை பரப்பக்கூடிய முதல் நபர் யான் என்ற விஷயத்தை சமூக வலைதளங்கள் கண்டறிய வேண்டும்
6. அரசு நீதிமன்றம் தகவல்களை கேட்டால் சமூக வலைத்தளங்கள் நிச்சயம் வழங்க வேண்டும்
7. ஒருவரின் கணக்கை நீக்கினால் அதுகுறித்த விவரத்தை சம்மந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனம் தர வேண்டும் என தெரிவித்துள்ளது.