இமாலய விலைக்கு விற்ற ரெம்டெசிவிர்; மத்திய அரசின் தலையீட்டால் விலை குறைப்பு!

Remdesivir
Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (08:45 IST)
இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு அதிகம் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்தின் விலை மத்திய அரசு தலையீட்டால் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கொரோனா ஆரம்ப தொற்றின் போது அளிக்கப்படும் சிகிச்சையில் ரெம்டெசிவிர் மருந்து நல்ல பலனளிப்பதாக உள்ளது. ஆனால் அதன் விலை அதிகமாக இருப்பதால் பலரால் அந்த மருந்தை பெற முடியாத சூழலும் இருந்து வந்தது.

இந்நிலையில் இதுகுறித்து மத்திய அரசு தலையிட்டு விலையை குறைக்க பேசியதை தொடர்ந்து மருந்து நிறுவனங்கள் ரெம்டெசிவிர் விலையை குறைத்துள்ளன. முன்னதாக ரூ.2,800 க்கு விற்பனையாகி வந்த ரெம்டெசிவிர் மருந்து தற்போது விலை ரூ.899 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :