வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 10 ஏப்ரல் 2015 (13:20 IST)

மே-1 முதல் செல்போன் ரோமிங் கட்டணங்கள் குறைகின்றன - டிராய் அறிவிப்பு

மே 1ஆம் தேதி முதல் செல்போன் ரோமிங் கட்டணங்களும், எஸ்.எம்.எஸ். கட்டணங்களும் முதல் குறைக்கப்படுவதாக டிராய் அறிவித்துள்ளது.
 
செல்போன் சேவை நிறுவனங்கள் வசூலிக்கும் தேசிய ரோமிங் அழைப்புகளுக்கான கட்டணத்தையும், எஸ்.எம்.எஸ். கட்டணத்தையும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’, குறைத்துள்ளது. இந்த அறிவிப்புகள் வருகின்ற மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளது.
 

 
ரோமிங் எல்லைக்குல் இருக்கும்போது, தேசிய அழைப்புக்கான (எஸ்.டி.டி.) அதிகபட்ச கட்டணத்தை ரூபாய் 1.50இல் இருந்து ரூபாய் 1.15 ஆக குறைத்துள்ளது. அதுபோல ரோமிங் எல்லைக்குல் இருக்கும்போது, செய்தி சேவை (எஸ்.எம்.எஸ்.) கட்டணத்தை ரூபாய் 1.50இல் இருந்து 38 பைசாவாக குறைத்துள்ளது.
 
இது தவிர ரோமிங்கில் இருக்கும்போது, இன்கமிங் அழைப்புக்கான கட்டணத்தை 75 பைசாவில் இருந்து 45 பைசாவாக குறைத்துள்ளது.
 
மேலும், உள்ளூர் செய்தி சேவையின் (எஸ்.எம்.எஸ்.) அதிகபட்ச கட்டணத்தை ஒரு ரூபாயில் இருந்து 25 பைசாவாக குறைத்துள்ளது. மேலும், உள்ளூர் அழைப்புக்கான அதிகப்பட்ச கட்டணம் ஒரு ரூபாயில் இருந்து 80 பைசாவாகவும் குறைகிறது.