1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Modified: புதன், 1 அக்டோபர் 2014 (17:40 IST)

வெளிநாடுகளில் இருந்து பட்டாசு இறக்குமதி செய்யக் கட்டுப்பாடு

இந்தியாவில் பட்டாசுகள் இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்ட பொருள் என்றும் அதை இறக்குமதி செய்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக டைரக்டர் ஜெனரல் ஆப் பாரின் டிரேடு அறிவித்துள்ளது.

இது குறித்து மேலும் விவரம் வருமாறு:
 
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள், தவறாகப் பெயரிடப்பட்டு இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன என்ற தகவல் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. பலதரப்பட்ட பட்டாசு சங்கங்கள், அதில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருளான பொட்டாட்சியம் குளோரட்டானது தீங்கு விளைவிக்கக் கூடியது மற்றும் உடனே தீப் பிடித்து வெடிக்கும் தன்மையைக் கொண்டது எனத் தெரிவித்துள்ளன. தமிழ்நாடு பட்டாசு மற்றும் அமோர்சஸ் உற்பத்தியாளர் சங்கத்தினர், அரசிற்கு, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் சட்ட ரீதியாக இல்லாமல் நமது நாட்டிற்குள் அதிகமான அளவுகளில் ஊடுருவியுள்ளன எனத் தெரிவித்துள்ளார்கள். மேலும், அவை அனைத்தும் வரும் தீபாவளி நாட்களில் சில்லரை வர்த்தகத்தில் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குளோரேட் மற்றும் அதனுடன் சேர்ந்த சல்பர் அல்லது சல்பருடன் சேர்ந்த மற்ற வேதிப் பொருட்கள், இவை அனைத்தையும் பயன்படுத்துவதற்கும் மற்றும் விற்பதற்கும் நமது நாட்டில் குறிப்பாணை எண் ஜிஎஸ்ஆர் எண். 64(இ) தேதி 27.01.1992-ன் படி முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இன்றைய தேதி வரைக்கும் இந்தப் பட்டாசுகளை இறக்குமதி செய்வதற்கு, எந்த உரிமமும் வழங்கப்படவில்லை. இந்தத் துறையானது பாமர்ஸ் அன்ட் இண்டஸ்ட்ரீஸ் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.
 
இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாக மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பட்டாசுகளை இருப்பு வைப்பதும், விற்பதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். அப்படிப்பட்ட பட்டாசுகளை இருப்பு வைத்துள்ள இடங்களையும் மற்றும் விற்பனையையும் விற்பனை மையங்களையும் பற்றிய தகவல்களை அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தெரிவிக்கும்படி பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.