ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிபிஎஸ்இ தேர்வு ஒத்திவைப்பு!

cbse
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிபிஎஸ்இ தேர்வு ஒத்திவைப்பு!
siva| Last Updated: வெள்ளி, 5 மார்ச் 2021 (19:53 IST)
ரம்ஜான் பண்டிகையின்போது நடக்க இருப்பதாக அறிவிக்கப் பட்டிருந்த பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் சற்றுமுன் அறிக்கை வெளியிட்டுள்ளது

ரம்ஜான் பண்டிகை வரும் மே மாதம் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே மே 13 மற்றும் 15ம் தேதிகளில் சிபிஎஸ்இ தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தேதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது

இதனை அடுத்து மே 15ஆம் தேதி நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு மே 21ம் தேதிக்கு மே 13ஆம் தேதி நடைபெற இருந்த பன்னிரண்டாம் வகுப்பு இயற்பியல் தேர்வு ஜூன் 8ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை சிபிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :