புதன், 18 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 6 மே 2024 (07:32 IST)

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? புதிய தகவல்..!

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாக இருக்கும் நிலையில் சிபிஎஸ்சி 10, 12-ம் வகுப்பு அழகான தேர்வு முடிவுகள் எப்போது என்ற தகவல் தற்போது கசிந்து உள்ளது 
 
சிபிஎஸ்இ பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது என்பதும் அதேபோல் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிந்துவிட்டது என்பது தெரிந்தது
 
இந்த நிலையில் தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வுகள் முடிவுகள் இன்று வெளியாக இருக்கும் நிலையில் சிபிஎஸ்சி 10, 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் ஒரே நாளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
கடந்த சில ஆண்டுகளாக மே முதல் வாரம் சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி வரும் நிலையில்  இந்த ஆண்டு மே 20 ஆம் தேதிக்கு பிறகு வெளியிடப்படும் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சிபிஎஸ்சி தனது இணையதளத்தில் தெரிவித்திருந்தது 
 
எனவே மே 20 ஆம் தேதிக்கு பிறகு இந்த தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் ஒரே நாளில் 10, 12 ஆகிய இரு வகுப்புகளுக்குமான தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் தகவல் கசிந்துள்ளது
 
Edited by Siva