காவிரி பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண பிரதமர் முன்வர வேண்டும்: சரத்குமார்


K.N.Vadivel| Last Modified வெள்ளி, 25 செப்டம்பர் 2015 (01:09 IST)
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் காவிரி நிர்வாகக்குழு கூட்டத்தில், காவிரி பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண பிரதமர் முன்வர வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
 
 
இது குறித்து, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–
 
செப்டம்பர் 28ஆம் தேதி, டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் காவிரி நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
இந்த கூட்டம் வழக்கமான சம்பிரதாயமான கூட்டமாக இஅன்றி காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையிலும், தமிழகத்தின் உரிமை நிலை நாட்டப்படும் வகையிலும் அமைய வேண்டும். இதற்கான உறுதியான முடிவுகளை பிரதமர் எடுக்க வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள்.
 
மேலும், காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்கப்பட வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றார்.
 


இதில் மேலும் படிக்கவும் :