வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (00:50 IST)

காவிரி கலவரம்: ஐ.டி. நிறுவனங்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு - வெளியேற முடிவு

பெங்களூரு வன்முறைச் சம்பவங்களால், அங்குள்ள ஐ.டி. நிறுவனங்கள் ரூ. 25 ஆயிரம் கோடி அளவிற்கு இழப்பை சந்தித்திருப்பதாக அசோசெம் அமைப்பு கூறியுள்ளது.
 

 
காவிரி பிரச்சனையையொட்டி, பெங்களூவில் நடத்தப்பட்ட முழுஅடைப்பு மற்றும் வன்முறைச் சம்பவங்களால், இந்த மாதத்தில் மட்டும் மொத்தம் 4 நாட்களுக்கு ஐ.டி நிறுவனங்களின் பணிகள் முற்றிலும் முடங்கின.
 
இங்கு பணியாற்றி வந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த பெரும்பாலான ஊழியர்கள் வன்முறைக்குப் பயந்து வெளியேறிவிட்டனர். இதனால், கர்நாடகத்தில் ஐ.டி. துறை மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது.
 
குறிப்பாக பெங்களூருவில்தான் மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 22 ஆயிரம் கோடி முதல் ரூ. 25 ஆயிரம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தொகை, உத்தேச தொகைதான்; இதை விடவும் அதிகம் இழப்பு இருக்க வாய்ப்பு உண்டு என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
 
பெங்களூருவில் மொழி வெறியர்களால் அடிக்கடி வன்முறைச் சம்பவங்கள் நிகழ்வதால், ஐ.டி நிறுவனங்கள் மட்டுமல்லாது சிறிய மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களும், தங்கள் இருப்பிடத்தை வேறு மாநிலத்துக்கு மாற்ற முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.